மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக நாகராஜன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆட்சியர் பொறுப்பை அம்மாவட்ட வருவாய் அதிகாரி கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி மற்றும் ராஜாராமனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். பாலாஜி, பொதுப்பணித் துறை கூடுதல் செயலராகவும், ராஜாராமன் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.