மதுரை: அரசு உதவி பள்ளியில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி கழிவறை சுற்றுச் சுவர் இடிந்தது விழுந்தது. இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது திருநெல்வேலி சந்திப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி, பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "சம்பவம் நடந்த சில மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்ததாகவும், கழிவறை சுற்றுச்சுவர் 2007ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டதாகவும் கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”மனுதாரர்கள் இருவரும், இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றுள்ளனர். ஆகவே விபத்திற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க இயலாது” எனக் கூறி இருவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த வலியுறுத்தல்