மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் கட்டட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று ஒத்தக்கடைப் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததால், உடலில் மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
அவரை சக தொழிலாளர்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது செல்வேந்திரன் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரின் உடலை வாங்க மறுத்து அவர்கள் கட்டட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் எனக்கூறி மருத்துவமனை அமைந்துள்ள பணங்கள் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுதைகள் கட்சியினர் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதையடுத்து பாதுகாப்பிற்காக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க: தலையில் கல்லைப் போட்டு கொலை! - பாலத்திற்கடியில் கிடந்த ஆண் சடலம்!