ETV Bharat / city

Premalatha Vijayakanth case: பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து!

Premalatha Vijayakanth case: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jan 6, 2022, 9:17 PM IST

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

Premalatha Vijayakanth case: தேமுதிக பொருளாளர் பிரேமலதா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஒரு ஓட்டுக்கு எனக் கேட்டுப் பணம் வாங்க வேண்டும் எனப் பொதுமக்களிடையே பேசியதாக திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்தும், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்துசெய்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்தக் கருத்தைக் குறிப்பிடவில்லை. ஆகவே அவர் மீதான வழக்கு ரத்துசெய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'ஸ்மார்ட் சிட்டி விவகாரம்; விரைவில் விசாரணைக் குழு அமைக்கப்படும்'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.