ETV Bharat / city

கிராம உதவியாளர் பணியிட அறிவிப்பு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - கிராம உதவியாளர் பணியிடம்

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பிற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடைவிதித்தது உத்தரவிட்டது.

madurai
madurai
author img

By

Published : Feb 9, 2021, 10:37 AM IST

திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த வசந்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "நிலக்கோட்டை தாலுகாவில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு அக்டோபர் 12இல் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது.

எட்டு காலியிடங்களுக்கு உரிய தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து புதுப்பித்திருக்க வேண்டும். 2 கி.மீ. தொலைவிற்குள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

நான், உயர்கல்வித் தகுதி பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட கிராம எல்லைக்குள் இல்லையெனவும் கூறி விண்ணப்பம் தர மறுத்துவிட்டனர். இது 2015ஆம் ஆண்டின் அரசாணைக்கு எதிரானது. எனவே, கிராம உதவியாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்குத் தடைவிதிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு சட்டவிரோதம் என்பதால் அதை ரத்துசெய்து, விதிகளைப் பின்பற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், 2015ஆம் ஆண்டின் புதிய திருத்த விதிப்படி அந்தத் தாலுகாவிற்குள் இருந்தாலே போதுமானது. புதிய விதியைப் பின்பற்றாமல், பழைய விதிப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டவிரோதம் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: தடய அறிவியல் நிபுணர்களின் பணிதான் என்ன? - நீதிபதிகள் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.