தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த மாணவியின் தந்தை சேதுராமன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " என் மகள் முறையாக பயிற்சி பெற்று நன்றாக படித்து நீட் தேர்வு எழுதினார். ஆனால், 61 மதிப்பெண்கள் மட்டுமே அவர் பெற்றதாக முடிவு வந்தது. இது தொடர்பான விடைத்தாள் ஓ.எம்.ஆர் ஷீட் வெளியானபோது, அவரது தேர்வு முடிவுகள் மாறுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, எனது மகள் முப்பிடாதியின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மருத்துவக் கலந்தாய்வில் ஒரு இடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும் " எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இது குறித்து மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக்குழு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்குத் தடைக்கோரிய வழக்கு - விராட் கோலி, கங்குலி, பிரகாஷ் ராஜ், ராணா, தமன்னாவுக்கு நோட்டீஸ்!