ETV Bharat / city

மதுரை அழகர் கோயிலில் தீ விபத்து - மின் கசிவு காரணமா..?

மதுரை அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர்கோயில் மடப்பள்ளி அருகே உள்ள அறைகளில் தீவிபத்து.

மதுரை அழகர் கோயிலில் தீ விபத்து
மதுரை அழகர் கோமதுரை அழகர் கோயிலில் தீ விபத்துயிலில் தீ விபத்து
author img

By

Published : Oct 2, 2022, 6:20 AM IST

மதுரை: அழகர்கோயில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் அவசர அவசரமாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தும் சிறிது நேரம் தாமதமானதால் அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவ தொடங்கியது. இதன் காரணமாக அறையில் உள்ள சுவாமி படங்கள், புத்தகங்கள், கோயிலுக்கு சொந்தமான ஆவணங்கள், தீயில் கருகி சேதமடைந்தன.

கோயில் பணியாளர்கள் முதற்கட்டமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி தோல்வி அடைந்தது. தொடர்ந்து மேலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். ஆனால், தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்த நிலையில் தனியார் லாரிகள் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

மதுரை அழகர் கோயிலில் தீ விபத்து

மேலும் பழமையான கற்களால் அமைக்கப்பட்ட கட்டிடம் என்பதால் கட்டிடம் இடிந்து சேதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கட்டிடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர்.

இந்நிலையில் கோயிலில் தீப்பற்றிய பகுதிகளில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், மேலூர் கோட்டாட்சியா் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - ஊராட்சிமன்ற தலைவர் அஜய்குமார் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.