வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மதுரை வந்தடைந்தார். அவருடன் பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்ய மாநில இளைஞரணி செயலாளருமான சினேகனுடன் வந்தார். அவர்களை வரவேற்க கட்சயினரும், ரசிகர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர்.
அதைத்தொடர்ந்து சினேகன் தனது ரசிகர்களுடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதற்கிடையில் கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் சினேகனின் செல்ஃபோனை திருடியுள்ளார். அதையறிந்த சினேகன் அருகிலிருந்தவர்களிடம் செல்ஃபோனை காணவில்லை என தெரிவித்தார்.
பின்னர், ரசிகர்கள் கூட்டத்தில் சந்தேகதிற்கிடமாக இருந்த இளைஞரை பிடித்து விசாரிக்கையில், அவர் செல்ஃபோனை திடுடியிருப்பதும், மொத்தம் 3 பேர் செல்ஃபோன் திருட வந்திருந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, ரசிகர்கள் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து மதுரை பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது’ - பொங்கிய கமல்: காரணம் என்ன?