மதுரை விராட்டிபத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று, மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “தமிழக அரசு செய்துள்ள அனைத்து திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க உள்ளோம். போட்டியாளர்கள் என்று யாரும் எங்களுக்கு கிடையாது. அனைவரும் நண்பர்கள் தான். மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியும்.
மதுரையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக வாகனப் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, வைகை ஆற்றின் குறுக்கே பல்வேறு பாலங்கள் மற்றும் தடுப்பணைகள் கட்டி வருகிறோம். தொடர்ந்து வாகனக் காப்பகம், மேம்பாலங்கள், பெரியார் பேருந்து நிலைய ஸ்மார்ட் சிட்டி கட்டுமானம் மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்து வருகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ’திமுக அறிக்கை கதாநாயகன்; அதிமுக அறிக்கை வில்லன்’