மார்ச் 12ஆம் தேதி ஊத்துப்பட்டி விலக்கு அருகே கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும், சோதனை செய்ய பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு, பறக்கும் படைக்குழுவின் தலைவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடம்பூர் ராஜு மீது வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "தவறான தகவலின்பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணக்குக் காட்டும் நோக்கிலும், மனுதாரர் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்பிணை வழங்கும்பட்சத்தில் விசாரணைக்கு அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன். ஆகவே இந்த வழக்கில் முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் நேரம் என்பதால் மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்!