மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமன்றி விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கு விற்பனைக்கு வருகின்றன.
பூக்களின் விலை நிர்ணயத்தில் மதுரை மலர் வணிக வளாகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலையில் மதுரை மல்லிகை கிலோ ரூ.1000ஆக குறைந்து காணப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.120, பட்டன் ரோஸ் ரூ.80, பட்ரோஸ் ரூ.80 என பூக்களின் விலை கணிசமாகக் குறைந்து காணப்படுகிறது.
மதுரை மல்லியின் விலை மேலும் சில நாள்கள் நீடிக்கும் எனப் பூ வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2019 ஜல்லிக்கட்டு நடைமுறைகளைப் பின்பற்ற கோரிய வழக்கு