ETV Bharat / city

மல்லிகை மட்டுமின்றி விலையும் மணக்க வைக்கிறது விவசாயிகளின் மனத்தில்...! - மல்லிகைப்பூ விலை

மதுரை: மல்லிகை விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் மதுரை மல்லிகையின் விலை

author img

By

Published : Dec 24, 2020, 11:33 AM IST

மதுரை மலர்ச்சந்தை மதுரை மாவட்டம், தென் மாவட்டங்களின் பூ உற்பத்தியாளர்களின் சரணாலயமாகும். மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் பூ இங்கு அதிகமாக குவியும்.

இந்நிலையில் இன்று (டிச. 24) மதுரை மலர்ச்சந்தைக்குப் போக்குவரத்து பெருமளவு குறைந்த காரணத்தால், மதுரை மல்லி கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, அரளி ரூ.300, பிச்சிப்பூ ரூ.1200, முல்லை ரூ.1200, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.200, கனகாம்பரம் ரூ.2000, மெட்ராஸ் மல்லி ரூ.1000 என பூவின் விலை உயர்தே காணப்படுகிறது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் மதுரை மல்லிகையின் விலை
மதுரை மலர்ச்சந்தையில் தொடர்ந்து அனைத்து பூவின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, மல்லிகையின் விலை கடந்த சில நாள்களுக்குள் சற்றேறக்குறைய 12 மடங்கு விலை ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.
நாளை மறுநாள் (டிச. 26) வைகுண்ட ஏகாதசி என்பதால் பூவின் விலை ஏற்றம் மிகக் கடுமையாக இருக்கும் இருக்கும் எனப் பூ வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.