மதுரை: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க மாபெரும் அறிவிப்பு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தொண்டர்களுடையது என்பதை நிரூபித்துள்ளது என மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க மாபெரும் அறிவிப்பு.
![Madurai Aadeenam remark AIADMK CM Candidate It's a historical decision Madurai Aadeenam எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து மதுரை ஆதீனம் எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை ஆதீனம் ஆதரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-aadheenam-cm-wishes-script-7208110_07102020224805_0710f_1602091085_703.jpg)
இந்த அறிவிப்பு அதிமுக என்றும் தொண்டர்களுடையது என்பதை நிரூபித்துள்ளது. 2021ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார்கள். அவர்களின் வெற்றி, ஆட்சி சிறப்பாக அமையும்” என வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க:“2021இல் அதிமுக ஆட்சி தொடரும்”- முதலமைச்சர் பழனிசாமி உறுதி