மதுரை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. தற்போது ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது.
இந்த 7 நாள்கள் சுற்றுலா, ஜூலை 27 அன்று திருச்சியில் இருந்து தொடங்குகிறது. விமான கட்டணம் உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயண காப்பீடு உள்பட ஒரு நபருக்கு 37ஆயிரத்து 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும். அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். இந்த சுற்றுலா குறித்த மேல் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் பிரபல பரோட்டா கடைக்கு சீல்