சென்னை, மதுரை, திருச்சி, கரூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலம்மாள் குழுமத்திற்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமத்தினர் மாணவ - மாணவியரிடம் அதிகப்படியான கட்டணங்களை வசூலித்து கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.
மேலும் கடந்த சில வருடங்களாகவே வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதன் அடிப்படையில் தற்போது வருமானவரித் துறை அலுவலர்கள் வேலம்மாள் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலையில் தொடங்கிய இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், சோதனையானது நாளைவரை நடைபெறலாம் என்றும் அலுவலர்களின் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து தேனி மற்றும் மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களில் வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனை மேற்கொண்டதாக அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: