ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.
அப்போது, 1200க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.2️ கோடி மதிப்பிலான உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தின் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்டம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வட்டார வாரியாக வழங்கப்பட இருக்கிறது என்றார்.
தொடர்ந்து நடிகர்கள் ரஜினி காந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட போவதாக கூறியுள்ளனரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான். ஒன்று செய்ய முடியாது. இந்த மொட்டை சொல்கிறேன்” என்று நகைச்சுவையாகவும் நறுக்கென்றும் பதிலளித்தார்.
சிறப்பு குறைதீர் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் திருவாடாணை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருணாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : நட்பு முக்கியமில்ல தமிழ்நாட்டு நலன்தான் முக்கியம் - கமல்ஹாசன்