ஹோமியோபதி மருத்துவ நல சங்கத்தின் செயலாளர் பக்ரூதின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மத்திய ஆயூஷ் அமைச்சகத்தின் ஒப்புதல் படி கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஹோமியோபதி மருந்தான 'ஆர்ஷனிக் ஆல்பம் 3C' என்ற மருந்து கொடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோமியோபதி மருந்து மணிப்பூர் மாநிலத்தில் வழங்கபட்டு வருகிறது.
தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின்படி, தெலுங்கானாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில்,சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளோடு சேர்த்து இந்த ஹோமியோபதி மருந்தையும் வழங்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பு மருந்தாகவும் இது வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.