ETV Bharat / city

ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு உள் துறைச் செயலர், சிறைத் துறைத் தலைவர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து
author img

By

Published : Jan 6, 2021, 4:03 PM IST

ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிச்சந்திரன் உள்ளார்.

ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவுசெய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் எனத் தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. கரோனா காலத்தில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின்கீழ் எனது மகன் தண்டனை பெற்று உள்ளதால் அவருக்குச் சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இதனைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்துசெய்துள்ளது. ஆகவே இவற்றைக் கருத்தில்கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றம் ரத்துசெய்த காரணத்தையே மீண்டும் குறிப்பிட்டு ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு மறுத்துள்ளதை ஏற்க இயலாது. ஆகவே 27 ஆண்டுகளாக நன்நடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அரசுத் தரப்பில் இது தொடர்பாக பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், "இது தொடர்பாக தமிழ்நாடு உள் துறைச் செயலர், சிறைத் துறைத் தலைவர், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் காவலர் பிணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.