புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து ஆரோக்கியதாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மெசியான், உச்சிப்புளி அருகே வட்டவளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் , மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன், திருப்புல்லாணியைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 18ஆம் தேதி இரவில் நடுக்கடலில் மீன் பிடித்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல் அந்த மீனவர்களின் விசைப்படகின் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் படகு மூழ்கி, அந்த 4 மீனவர்களும் கடலில் மூழ்கிவிட்டனர் .
இதற்கிடையே கடலில் மூழ்கிய நான்கு பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் இரண்டு கப்பல்கள் மூலமாகவும், மீனவர்கள் படகுகளில் சென்றும் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த, நான்கு பேரின் உடல்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். உடனடியாக தமிழ்நாட்டை சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரின் உடல்களையும் உடனடியாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு கொண்டு வர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை(ஜன. 25) விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க...வேலியே பயிரை மேய்ந்தால் அது மிகவும் அபாயகரமானது