ETV Bharat / city

மதுரை வளர்ச்சிக் குழும தற்காலிக அமைப்பு - அரசு ஆணை - தமிழ்நாடு அரசாணை வெளியீடு

பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மதுரை நகர வளர்ச்சிக் குழுமம் தற்காலிக அமைப்பு உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி
author img

By

Published : Dec 23, 2021, 11:48 AM IST

சென்னை: மதுரை முழுமைத் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், "மதுரை முழுமைத் திட்டத்திற்கு 14 பேர் கொண்ட குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கீழ்க்காணுமாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்துவரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குப்படுத்தி திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதிசெய்திட புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் பகுதி - வேகமாக வளர்ந்துவரும் ஒசூர் பகுதிக்கு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நீண்ட நெடிய பாரம்பரியம் உடைய மதுரை

அந்த அறிவிப்பின்படி 1972ஆம் ஆண்டில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை அடிப்படையாகக் கொண்டு கோயம்புத்தூர், திருப்பூர் நகர குழுமத்தை தற்காலிகமாக உருவாக்கிட அரசாணை சென்ற நவம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, மதுரையில் மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை தற்காலிகமாக அமைத்திட (Adhoc body) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வளர்ந்துவரும் மாநகரங்களில் மதுரை மூன்றாவது பெரிய மாநகராக 147,97 ச.கி.மீ. பரப்பளவுடன் அமைந்துள்ளது.

மதுரை, நீண்ட நெடிய பாரம்பரியமும் தொன்மைவாய்ந்த கலாசாரமும் கொண்டதாகவும் பன்னாட்டு விமான நிலையம், ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, பெரும் வர்த்தகம் - வணிக நடவடிக்கைகள் கொண்ட மாநகரமாகவும் திகழ்ந்துவருகிறது. வைகை ஆறு பாயும் மதுரையில் நிலத்தடி நீரும் செரிந்து காணப்படுகிறது.

மதுரையின் வருங்கால வளர்ச்சி

மதுரை மாநகரம் கடந்த 30 ஆண்டு காலத்தில் அதீத மக்கள்தொகை பெருக்கத்தால் அதன் உட்கட்டமைப்பு வசதிகளில் பெரும் இடர்ப்பாடுகளைச் சந்தித்துவருகிறது. இதன் காரணமாக இம்மாநகரத்தில் சாலை, சுகாதாரம், கல்வி, குடிநீர் வழங்கல், வடிகால் வசதிகள் ஒழுங்கற்ற வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மதுரை நகர வளர்ச்சிக் குழுமம் மதுரை மாநகரின் சீரான வளர்ச்சிக்காகத் தற்போது தயாரிக்கப்பட்டுவரும் மதுரை முழுமைத் திட்டம் மதுரை மாநகரின் வருங்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக அமையும்; இது முன்னோக்குத் திட்டமானது.

மதுரை மாநகரின் திட்டமிடல் பகுதியின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியின் தேவைகளை எதிர்நோக்கி தயாரிக்கப்படும் மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தைத் தற்காலிகமாக அமைத்திட வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலரைத் தலைவராகவும், மாவட்ட ஆட்சியரைத் துணைத் தலைவராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

14 பேர் கொண்ட குழு

மதுரை நகர வளர்ச்சிக் குழும அமைப்பின் பணிகள் இந்த அமைப்பின் மூலம் மதுரை நகரப் பகுதிகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். இத்திட்டங்கள், புதிய நகர், ஊரமைப்புச் சட்டத்தின்கீழ் மண்டலத் திட்டம், முழுமையான திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை வழங்கும்.

மேலும், மதுரை நகர்ப் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதை ஒருங்கிணைத்தல், திட்டங்களைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடுதல், நிதியுதவி அளித்து திட்டங்களைச் செயல்படுத்துதல், அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிற பணிகளையும் மேற்கொள்ளும்.

இதற்காக ஆலோசனைக் குழு மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தின் வளர்ச்சித் திட்டங்களைத் தயாரித்துச் செயல்படுத்தி ஆலோசளை வழங்கிட 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திட்டக்குழு

மதுரை நகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பணி மேற்கொள்ள, திட்டக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை நகரத் திட்டமிடல் அலுவலர், பொறியாளர், இதர அலுவலர்கள் உதவுவர்.

மதுரை நகர வளர்ச்சிக் குழும அமைப்பானது, மதுரை மாநகரின் சீரான வளர்ச்சிக்கும், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், நன்குத் திட்டமிடப்பட்ட நகரமாக உருவாவதற்கும் வழிவகுக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொளத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம் - மாநகராட்சி விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.