ETV Bharat / city

ஏப்.1 முதல் வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரம் 10 நிமிடங்கள் குறைப்பு - சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில்

சென்னையிலிருந்து புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் வருகின்ற ஏப்.1ஆம் தேதி முதல் பத்து நிமிடம் குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே
author img

By

Published : Mar 17, 2022, 10:59 PM IST

மதுரை: பகல் நேர விரைவு ரயிலாக மதுரையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து மதுரைக்கும் பயணிகளுக்குப் பெரும் சேவையாற்றி வரும் வைகை எக்ஸ்பிரஸ், கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை 44 ஆண்டுகளாக மதுரை மக்களின் ரயில் பயணத்திற்குப் பெரும் சேவையாற்றி வருகிறது.

வைகை எக்ஸ்பிரஸ்

ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வழக்கமாக காலை 7.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையைச் சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

10 நிமிடங்கள் குறைப்பு

இந்நிலையில், சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தில், பத்து நிமிடங்கள் குறைக்கப்பட்டு, 4 மணி 45 நிமிடத்தில் 336 கி.மீ. தூரமுள்ள திருச்சிராப்பள்ளி சந்திப்பை வந்தடையும். இதற்காக வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1.40 மணிக்குப் பதிலாக 1.50 மணிக்குப் புறப்படும்.

சென்னையிலிருந்து மதுரையின் மொத்த தூரமான 497 கிலோமீட்டரை 7 மணி 25 நிமிடங்களில் மதுரை சந்திப்பை வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக சென்னையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 7 மணி 35 நிமிடங்களாகும்.

மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. 7 மணி 25 நிமிடங்கள் பயணம் செய்து சென்னை எழும்பூர்‌ ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம்போல் வந்து சேரும்.

இதையும் படிங்க: 'தோழி' ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் - தனுஷ் ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.