மதுரை மாவட்டம் திண்டுக்கல் - திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் அமைந்திருக்கும் தனக்கன்குளம் பகுதியில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நான்கு வீலர் ஒர்க் ஷாப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து திருமங்கலம் மற்றும் மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இதைத்தொடர்ந்து டவுன் நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் திருமங்கலம் தீயணைப்பு துணையுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்
அதிக அடர்த்தியுடன் எறிந்த தீயால் கடையின் உள்ளேயிருந்த ஐந்து விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து நாசமானது.
தீ விபத்து குறித்து மதுரை ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவசர கதியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையிலேயே கடையை உரிமையாளர் அடைத்து சென்றதாகவும், அப்போது இருந்து பழுது செய்யாத காரின் பெட்ரோல் டேங்கிலிருந்து பெட்ரோல் காற்றில் பரவியிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திடீரென தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்துகள்!