சென்னையைச் சேர்ந்த பீட்டர்ராயன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் குறிப்பிட்டிருந்ததாவது, 'சமீபத்தில் 54 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அவர்களின் மறுவாழ்வுக்கு நல வாரியங்களை அமைக்கக்கோரிய மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே, மீனவர்கள் கடல்பகுதியில் எங்கு சிறை பிடிக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: '’கைது நடவடிக்கை தொடரும்’ - இலங்கை கடற்படை அறிவிப்பால் மீனவர்கள் அச்சம்'