மதுரை: உசிலம்பட்டி அருகே உள்ள சிரகம்பட்டி கிராமத்தில் ஆழமான கிணற்றுக்குள் தாய் மயிலும் அதன் குஞ்சுகளும் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்தன.
இதனைக் கண்ட கிராம மக்கள் உடனடியாக உசிலம்பட்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தாய் மயிலையும் அதன் ஐந்து குஞ்சுகளையும் மீட்டனர்.
பிறகு அவற்றை வனக் காப்பாளர் கௌசல்யாவிடம் ஒப்படைத்தனர். வனத் துறை மூலமாக மயில்கள் மிகப் பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் கொண்டு விடப்பட்டன. தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயில்களை உயிருடன் மீட்ட வனத்துறையினரை அக்கிராம மக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க: திருப்பூரில் ஒரே தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த 19 மயில்கள்