ETV Bharat / city

காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர்; ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நீதிமன்றத்தில் மனு.. - Rajendra Balaji sister filed petition court

ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்தது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நீதிமன்றத்தில் மனு

author img

By

Published : Dec 18, 2021, 8:02 PM IST

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தற்போது, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி ( அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். எனது மகன் வசந்தகுமார், ரமணா மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரை நேற்று (டிச.17) ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காவல்துறையினர் துன்புறுத்தினர்

காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மனுதாரர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் கையெழுத்து பெற்றுள்ளனர். எனவே ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும், எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரயும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நீதிமன்றத்தில் மனு
ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நீதிமன்றத்தில் மனு

அரசியல் ரீதியான குற்றச்சாட்டு

இந்த வழக்கு இன்று (டிச.18) அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்காக குடும்ப உறுப்பினர்களை காவல்துறையினர் மிகவும் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே காவல் துறையின் சட்டவிரோத செயலில் இருந்து குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, "குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள், விசாரணை செய்யுங்கள். ஆனால், குடும்ப உறுப்பினர்களைத் தொந்தரவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (டிச.20) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தனிப்படைகள் 6 ஆக அதிகரிப்பு; ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.