மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்குக் கோபுர பகுதியில் அமைந்துள்ள வீர வசந்த ராயர் மண்டபம், கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்தது.
இதனையடுத்து வீர வசந்த ராயர் மண்டபத்தின் கலைநயம் மிக்க தூண்களும் நொறுங்கி விழுந்தன. அதனை மீண்டும் கட்டும் பணிக்கு ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்த ராயர் மண்டப கல்தூண் சீரமைப்பு மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்த ராயர் மண்டப கல்தூண் சீரமைப்பு அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் , ராசிபுரம் வட்டம் , பட்டனம் கிராமத்தில் அரசு அனுமதி பெற்று திருக்கோயில் பெயரில் கல்குவாரி அமைக்கப்பட்டு உபயதாரர் மூலம் கற்கள் வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்த ராயர் மண்டப கல்தூண் சீரமைப்பு மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்த ராயர் மண்டப கல்தூண் சீரமைப்பு இதனைத் தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் இரண்டு கனரக வாகனங்களில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த கற்கள் கூடல்செங்குளம் பண்ணையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : பிறந்தது ஆடி, குறைந்தது தங்கம்!