ETV Bharat / city

நாங்குநேரியில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி...அந்தியோதயா, இன்டர்சிட்டி ரயில்கள் திருநெல்வேலி வரை இயக்கம் - தெற்கு ரயில்வே

நாங்குநேரியில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்தியோதயா மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாங்குநேரியில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி

author img

By

Published : Sep 16, 2022, 10:46 AM IST

திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூர் நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 27 வரை தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இதே போல செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28 வரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மேலும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) மற்றும் செப்டம்பர் 25 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12690) ஆகியவை திருநெல்வேலி நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

செப்டம்பர் 25 அன்று புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (16861) மற்றும் செப்டம்பர் 26 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

செப்டம்பர் 25 அன்று நாகர்கோவில் - திருநெல்வேலி (06641) திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (06668/06667) முழுமையாக ரத்து செய்யப்படும். செப்டம்பர் 26 அன்று திருநெல்வேலி - நாகர்கோயில் விரைவு ரயில் (06642) முழுமையாக ரத்து செய்யப்படும்.

இரட்டை ரயில் பாதை பணிகளின் ஒரு பகுதியாக நாகர்கோவில் - எரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக செப்டம்பர் 19, 22, 26, 29 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பர் 20, 23, 27, 30 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் - மதுரை விரைவு ரயில் (16730) முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் - TNPSC அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.