ETV Bharat / city

ஆதிச்சநல்லூரிலேயே அருங்காட்சியகம் அமைக்கக்கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம் - இதுதான் காரணமாம்!

தூத்துக்குடி, புளியங்குளம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்கக்கோரிய வழக்கை, இது அரசின் கொள்கை முடிவு எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

author img

By

Published : Jul 1, 2022, 7:33 PM IST

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த குமரகுருபரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான் பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோயிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் பழங்கால பாரம்பரியம் தொடர்பான விவரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது.

இவ்வளவு சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோயிலும், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிலையில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை தொல்லியல் துறையின் விதிகள் உறுதிப்படுத்துகிறது. ஆனால், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அகழாய்வு நடந்த இடத்திலிருந்து தொலைவில் உள்ளது.

இந்நிலையில், அகழாய்வு நடந்த இடத்திற்கு அருகிலேயே அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கர் 500 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருங்காட்சியகம் அமைக்கக்கோரி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, புளியங்குளம் கிராமத்தில் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு 'இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம் - முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.