ETV Bharat / city

'பழைய நோட்டை பார்க்கவும்' - மொய் செய்ய வலியுறுத்தும் திருமண அழைப்பிதழ்! - திருமண அழைப்பிதழ்

'2000லிருந்து 2020 வரை பழைய நோட்டை பார்க்கவும்' என்று குறிப்பிட்டு மொய் செய்ய வலியுறுத்தும் திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

marriage invitation, different style marriage invitation, madurai news, மதுரை செய்திகள், திருமண அழைப்பிதழ், கல்யாண பத்திரிகை
different style marriage invitation
author img

By

Published : Jan 22, 2021, 12:02 AM IST

மதுரை: கீழக்குயில்குடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றில் ஜனவரி 25ஆம் தேதி நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனையொட்டி உறவினர்கள் நண்பர்களை அழைக்க அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழின் பின்புறம் '2000-ல் சந்தித்த உங்களை மீண்டும் 2021-ல் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 2000ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரை பழைய நோட்டை பார்க்கவும்' எனக் குறிப்பிட்டு, மொய் செய்ய வேண்டும் என்பதை மறைமுகமாக இந்த வாசகங்கள் வலியுறுத்துகின்றன.

'பழைய நோட்டை பார்க்கவும்' - மொய் செய்ய வலியுறுத்தும் திருமண அழைப்பிதழ்

இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரையில் இதற்கு முன்பாக 'கூகுள் பே' 'போன் பே' போன்றவற்றின் மூலமாக மொய் செய்ய வலியுறுத்திய திருமண நிகழ்வும் நடைபெற்றது அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.