மதுரையில் காவல்நிலைய மரணங்களை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தியாகராஜர் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை2) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், 'காவல் துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 2018-ல் மட்டும் அதிகபட்சமாக 18 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2021-ல் 4 காவல் நிலைய மரணங்களும், 2022-ல் 2 காவல்நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது என்று கூறினார். அதனை நடைமுறைப்படுத்தும்படி, காவல் துறையினர் செயல்பட வேண்டும். தவறு செய்யாமலேயே, சில நேரங்களில் காவல் துறையினர் மீது புகார்கள் வருகின்றன. சிலர் உடல் நலக்குறைவு காரணமாக, தற்கொலை செய்து கொள்வர்.
ஆனால், அது காவல்துறை மீதான குற்றம்சாட்டாக மாறும். தமிழ்நாடு காவல் துறை பாரம்பரியமிக்க காவல்துறை. யாரையும் துன்புறுத்தமாட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும்; அதுவும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். காவல் துறை அரசாங்கத்தின் அங்கம்; சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கும் உட்பட்டு, காவல் கோட்டுபாடுகளை மதித்து காவல் துறை செயல்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: 72 வயது ஆணழகனை நேரில் அழைத்து வாழ்த்திய டிஜிபி!