மதுரை: உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆவணி மூலத்திருவிழா. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி, தற்போது நடைபெற்றுவருகிறது.
ஆவணி மூலத் திருவிழா
இந்த ஆவணி மூலத் திருவிழாவில்தான் சுவாமி நிகழ்த்திய திருவிளையாடல் நடக்கும். ஆவணிக்கு முக்கிய நட்சத்திரம் மூல நட்சத்திரம் ஆகும்.
காலையில் சூரியன் உதயமாகும்போது மிகுந்த ஒளியுடன் இருந்தால், அந்த ஆண்டு முழுவதும் வெயில் கொளுத்தும். மேகமூட்டத்துடன் காணப்பட்டால், அந்த ஆண்டில் வெள்ளச் சேதம் ஏற்படும் என்பது ஆவணி மூலத்திருவிழாவின் முக்கியத்துவம் பெற்றதாகும்.
இது குறித்து வெளியிட்டுள்ள கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோயிலில் நடைபெற்றுவரும் ஆவணி மூல உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான புட்டுக்கு மண் சுமந்த லீலை வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதியான வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
அன்றைய நாள் காலை 8 மணிக்கு திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே புறப்பாடு செய்யப்பட்டு, நான்கு ஆடி வீதிகளில் வலம்வந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.
புட்டுக்கு மண் சுமந்த லீலை மதியம் 1.05 மணிமுதல் 1.29 மணிக்குள் நடைபெறுவதால் ஆகஸ்ட் 19ஆம் தேதியில் திருக்கோயில் பாரம்பரிய வழக்கப்படி இந்நிகழ்வு நடைபெறும்.
இந்நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அன்று மாலை 4.00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிவரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்" என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் நிலையான வழிகாட்டுதல் உத்தரவின்படி ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'புனேயில் நரேந்திர மோடிக்கு கோயில்!'