மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவாகுமார், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல், சிவப்பு பீன்ஸ் பயிரிடப்படுகிறது. கடந்த 8 முறை இயற்கை சீற்றங்களால் பலமுறை டெல்டா மாவட்டங்களில் நெல் உள்பட பல பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதிலிருந்து விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டம் காப்பாற்றி வருகிறது.
இந்த காப்பீட்டு திட்டத்திற்கான பணம் ஒன்றிய, மாநில அரசு பங்கீட்டில் விவசாயிகள் பணம் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நெல் காப்பீடு தவிர்த்து பல பயிர்களுக்கு காப்பீடானதாக அறிவிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக நெல் பயிர்கள் அறுவடை செய்யக் கூடிய காலத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
எனவே, 2021 காப்பீட்டின் கீழ் நெல், சிவப்பு பீன்ஸ் இரண்டையும் சேர்க்க அரசிற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி துரைசுவாமி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2021: 10,058 பயனாளிகள் பயன்!