ETV Bharat / city

பட்டப்பகலில் படுகொலை - 3 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளி கைது! - murder case arrest after 3 months

மதுரை: மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கின் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

culprit-was-arrested-
culprit-was-arrested-
author img

By

Published : Oct 22, 2020, 11:24 AM IST

மதுரை பழங்காநத்தம் புறவழிச் சாலை நேரு நகரில் வசித்து வந்த பஞ்சவர்ணம் என்னும் பெண்மணி கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். சந்தேகத்தின் பேரில் சலவைத் தொழிலாளி பழனிக்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் தான் கொலை செய்ததையும், அத்துடன் பஞ்சவர்ணத்திடம் இருந்து, ரூ.50 ஆயிரம் ரொக்கம், 5 1/2 சவரன் தங்கச் சங்கிலி, தோடு ஆகியவற்றை கொள்ளை அடித்ததையும் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பைக்கில் லிப்ட் தருவதுபோல் மூதாட்டியிடம் நகை கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.