திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணியின் மதுரை வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எழுத்தாளர் சு.வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சு.வெங்கடேசன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள பிற நகரங்களை போன்று மதுரையை நாம் பார்க்க முடியாது. காரணம் இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய பெருமைமிக்க ஒரு மாநகர். அதன் பழமையை காக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
மதுரைக்கு மத்திய அரசு சார்ந்த உயர் கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வேன். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட நகரமாக மதுரை இருந்தது. அந்த நிலையை மாற்றி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மதுரைக்கு கொண்டு வர பெரும் முயற்சி எடுப்பேன், என்றார்.