ETV Bharat / city

மத ரீதியான சங்கங்களின் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட இடைக்கால தடை!

மதுரை : அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மத ரீதியான அமைப்புகளில் நடைபெறும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவவிட்டுள்ளது.

மத ரீதியான சங்கங்களின் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட இடைக்கால தடை விதித்த  நீதிமன்றம்!

author img

By

Published : Dec 22, 2020, 8:46 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், “அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அரசு பணியாளர் விதிமுறைப்படி மத ரீதியான அமைப்புகளில் நடைபெறும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் பதவி வகிக்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. ஆனால், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என பலரும் மத ரீதியான சங்கங்களில் நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நிர்வாகிகளாக பலர் பதவிகளில் உள்ளனர்.

எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மதம் தொடர்பான நிர்வாக பணி தேர்தலில் பதவி வகிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். அத்துடன், போட்டியிட இனி நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

மத ரீதியான சங்கங்களின் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட இடைக்கால தடை விதித்த  நீதிமன்றம்!
மத ரீதியான சங்கங்களின் தேர்தலில் ஆசிரியர்கள் போட்டியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

இந்த மனுவானது, மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.22) விசாரணைக்கு வந்தது.

அதனை ஆராய்ந்த நீதிபதிகள், “ அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு ஊதியம் பெற்று பணி புரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் மத ரீதியான நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு மேலதிக விசாரணையை ஜன. 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணத்துடன் சொத்து வரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.