மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் அதிரடி சோதனையை காவல்துறையினர் மேற்கொண்டனர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு கை துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பச்சைக்கறி செளந்தரராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாகனச் சோதனையில் சிக்கிய வெள்ளிக் கட்டிகள்!