வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக மதுரை மாநகர், பிற பகுதிகளில் நேற்று (டிச. 02) இரவுமுதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றும் சற்றே பலமாக வீசத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இன்று, நாளை, நாளை மறுநாள் தென் மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை அல்லது கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் பெய்து வரும் தொடர்மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு