மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள தெற்கு தெருவில் சாலையோரம் நிறுத்தி இருந்த 2 கார் ஆட்டோ உட்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை மதுபோதையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டு உள்ளது.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த ரூபன் குமார், அரி சுரேஷ், பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: ஆண்டிற்கு ஒரு திருமணம் - பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையடிக்கும் சிங்கப்பூர் போலீஸ்!