ETV Bharat / city

அங்கொடா லொக்கா விவகாரம் : மதுரை விமான நிலைய சிசிடிவி காட்சிகள் ஆய்வு! - Angoda lokka latest updte

மதுரை : அங்கொடா லொக்காவுக்கு உதவிய வழக்கறிஞர் குறித்து சிபிசிஐடி அலுலர்கள், மதுரை விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

Madurai International airport
Madurai International airport
author img

By

Published : Aug 10, 2020, 4:35 PM IST

இலங்கையைச் சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் அங்கொடா லொக்காவின் உடல் மதுரையில் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அவருக்கு உதவிய பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி தங்கியிருந்த ரயிலார் நகர் பகுதியில் உள்ள வீடுகள், அலுவலகம் ஆகிய இடங்களில் சிபிசிஐடி டிஎஸ்பி பரமசிவம் தலைமையிலான அலுவலர்கள், கடந்த ஐந்து நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாமி சுந்தரியின் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிவகாமி சுந்தரி தங்கியிருந்த வீடுகளின் உரிமையாளர்கள், சிவகாமி சுந்தரியின் முன்னாள் கணவர் வினோதகன், பெற்றோர் தினகரன், பாண்டியம்மாள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிவகாமி சுந்தரி பயன்படுத்திய காரின் ஓட்டுநரிடமும் காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது மதுரை விமான நிலையத்தில் இருந்த வந்த நபர்களை அழைத்து வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திற்கு சிவகாமி வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அங்கொடா லொக்காவுக்கு உதவிய வழக்கறிஞர் சிவகாமி, அடிக்கடி வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க வந்தவர்கள் யார், யார் எனக் கண்டுபிடிக்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சினிமா ஆசை, மூக்கு சர்ஜரி செய்த இலங்கை தாதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.