மதுரையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில தலைவர் ஷம்சுல்லைஹா ரஹ்மானி கூறுகையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
அதனை எதிர்ப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றோம். மார்ச் 18ஆம் தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பேரணி ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கும் இந்த பாசிச அரசு, அமைதி வழியில் போராடிய டெல்லி மக்கள் மீது வன்முறையாளர்களை கட்டவிழ்த்துவிட்ட இந்த அரசின் போக்கை கண்டிக்கிறோம் என்றார்.
இதையும் படிக்க:நிலம் எங்கள் உரிமை... இல்லையேல் தீ குளிப்போம்' - பொதுமக்கள் போராட்டம்