திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பிளாக் மாரியம்மன் கோயில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் ரத்தக் காயங்களுடன் ஒருவர் ரத்த இறந்துகிடந்தார்.
இதைக் கண்ட தென்னம்பாளையம் மார்க்கெட் தொழிலாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் கொலையானது யார்? கொலை சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? என்பது குறித்து அங்குள்ள மார்க்கெட் தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.