ETV Bharat / city

'பாஜகவின் ஆட்சிப் பொறுப்பு நாள், மக்களுக்கான நாள்' - எல். முருகன்

author img

By

Published : May 26, 2021, 10:45 PM IST

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜகவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

'பாஜகவின் ஆட்சிப் பொறுப்பு நாள், மக்களுக்கான நாள்' - எல். முருகன்
'பாஜகவின் ஆட்சிப் பொறுப்பு நாள், மக்களுக்கான நாள்' - எல். முருகன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி 2014ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலும், 2019 தொடங்கி வரும் 30ஆம் தேதியோடு ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே வருகிற 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து அளவில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக இருக்கக்கூடியவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும்.

தடுப்பு ஊசி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரத்ததான முகாம்கள், தடுப்பூசி போடுவதற்கு மக்களை தயார் செய்தல், கரோனா சிகிச்சைக்காக மக்களுக்கு தேவையான உதவிகள் என பல்வேறுவிதமான சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பூத் அளவிலும் நடக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு நிர்வாகிகளும் குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து, அந்த ஒரு நாள் முழுவதும் அந்த கிராமத்திலிருந்து சேவைப் பணி ஆற்ற வேண்டும்.

பாஜகவின் சேவை தொடரட்டும்:

கட்சியின் அணி, பிரிவு நிர்வாகிகள் அனைவரும் ரத்த தானம் முகாம் நடத்தி அவற்றை பொதுமக்களுக்கு சிகிச்சைக்காக பயன் பெறச் செய்ய வேண்டும். ரத்ததானம் முகாம் 30ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடத்தலாம். இதே காலகட்டத்தில் நாம் ஏற்கனவே செய்து வருகின்ற பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் மக்களுக்கு முகக் கவசங்கள், கபசுர குடிநீர் வழங்குவதும் தொடரவேண்டும்.

வரும் 30ஆம் தேதி முழுவதும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேவைப் பணிகளை செய்து, நமது ஏழாம் ஆண்டு நிறைவு நாளை சேவை தினமாகக் கொண்டாடி, மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதே வேளையில் தளர்வில்லா ஊரடங்கு தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பாதுகாப்பாக சேவைப்பணிகளில் ஈடுபட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்ய பள்ளிகளுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.