சிவகங்கை : வெள்ளையர்களை எதிர்த்து போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் அவரது நினைவு மணி மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
சிவகங்கை அரண்மனை வாசல் முதல் நகர் சாலை முழுவதும் திமுக, பாஜக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதனை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் உருவாக்கி பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்
இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பாஜகவுடன் திமுக சுமூக போக்கை கடைபிடிப்பதாக கூறப்படும் நிலையில், இந்த மீம்ஸ்கள் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீலகிரி செல்ல தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி!