ETV Bharat / city

தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம்! - நீதிபதிகள் வலியுறுத்தல்!

மதுரை: ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது.

grabbing
grabbing
author img

By

Published : Dec 7, 2020, 7:31 PM IST

திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ கடந்த 1973 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது தந்தை பெயரில் நிலம் வாங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தை சட்ட விரோதமாக பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர். துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், துறையூர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, மாவட்ட குற்றவியல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இது போன்று பல தனி நபர்கள் மற்றவர் நிலங்களை ஆக்கிரமித்து தங்களது பெயருக்கு பதிவு செய்து கொள்கின்றனர். இதுபோன்ற நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருவதால், பிற மாநிலங்களைப் போல நில அபகரிப்பு தடுப்புச் சட்டத்தை தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும் “ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல், தமிழகத்திலும் நில அபகரிப்பு தடைச் சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 16 ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: 'கையில் கட்டுடன் ஆண்கள்; நாற்றுடன் பெண்கள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.