ETV Bharat / city

Fake certificate: போலி மருத்துவச் சான்றிதழ்: மருத்துவர் மீது நடவடிக்கை - கஞ்சா

தஞ்சாவூரில் போலியாக மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர் மீது நடவடிக்கை
போலி மருத்துவச் சான்றிதழ்
author img

By

Published : Nov 18, 2021, 9:24 PM IST

மதுரை: கோபிநாத் என்பவரை கஞ்சா வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் கோபிநாத்துக்கு தஞ்சாவூர் சிறப்பு நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது. மூன்று வாரத்துக்குப் பிறகு நீதிமன்றம் சரணடையவும் உத்தரவிட்டது.

ஆனால் கோபிநாத் சரணடையாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் முன்பிணை கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கோபிநாத் மனு தாக்கல் செய்தார். அதில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதால் நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை என்று கூறியிருந்தார்.

தனது மனுவுடன் தஞ்சாவூர் மருத்துவர் சி.பாலாஜி வழங்கிய மருத்துவச் சான்றிதழையும் அவர் தாக்கல் செய்தார். இந்நிலையில் கோபிநாத்தின் முன் ஜாமீன் மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதி, இதுபோன்ற பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழிப்பது, பொய் மருத்துவ சான்றிதழ் வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது மருத்துவ கவுன்சில் கடமையாகும் என்றார்.

இந்த வழக்கில் மனுதாரர் மீது 14 வழக்குகள் உள்ளன. 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது முன்நடத்தை, பொய் மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்தது போன்ற காரணங்களுக்காக அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IPS officers Transfer: கோவை காவல் ஆணையர் உள்பட தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.