அலங்காநல்லூர் அருகே உள்ள குலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 33). இவர் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். முன்னதாக, வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் ராஜேஷ் கண்ணா சிரமப்பட்டு வந்ததாகவும், அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், குலமங்கலம் கண்மாய் கரையில் ராஜேஷ் கண்ணா விஷமருந்தி மயங்கிக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு பதறி, அருகிலிருந்தவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று (அக்.16) ராஜேஷ் கண்ணா உயிரிழந்தார்.
உயிரிழந்த காவலர் ராஜேஷ் கண்ணாவுக்கு மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடன் சுமையால் ராஜேஷ் கண்ணா விஷம் குடித்தாரா அல்லது பணிச்சுமை காரணமா என்பது குறித்து அலங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை! 4 பேர் கைது