ETV Bharat / city

உற்பத்திப் பொருள்களைச் சலுகைக் கட்டணத்தில் அனுப்பலாம் - மதுரை ரயில்வே கோட்டம் - கிசான் ரயில் திட்டம்

சிறு, குறு விவசாயிகள் வேளாண் உற்பத்திப் பொருள்களைச் சலுகைக் கட்டணத்தில் ரயிலில் அனுப்புவது தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தை மதுரை ரயில்வே கோட்டம் தொடங்கியுள்ளது.

"கிசான் ரயில்" போக்குவரத்து திட்டம்
"கிசான் ரயில்" போக்குவரத்து திட்டம்
author img

By

Published : Dec 31, 2021, 12:12 PM IST

மதுரை: தென் மாவட்ட சிறு, குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களை சலுகைக் கட்டணத்தில் ரயிலில் அனுப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை ரயில்வே கோட்டம் ஒரு மாதம் தொடர் பரப்புரையில் ஈடுபட உள்ளது.

சலுகைக் கட்டணம்

சிறு, குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருள்களைச் சலுகைக் கட்டணத்தில் ரயிலில் அனுப்ப 'கிசான் ரயில்' போக்குவரத்துத் திட்டம் 2020 - 21ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிஃபிளவர், பச்சை மிளகாய், வெள்ளரி, போன்ற காய்கறிகளை 50 விழுக்காடு சலுகைக் கட்டணத்தில் சிறு, குறு விவசாயிகள் கிசான் ரயில் மூலம் அனுப்ப முடியும்.

அதேபோல் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, எலுமிச்சை, அன்னாசிப் பழம், மாதுளை, பேரிக்காய், கிவி, லிச்சி போன்ற பழவகைகளையும் சலுகைக் கட்டணத்தில் அனுப்பலாம்.

ஏற்கனவே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் அதிகமாக விளையக் கூடிய விவசாய விளைப்பொருள்கள் பிகார், டெல்லி, அஸ்ஸாம், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு கிசான் ரயில் மூலம் அனுப்பப்பட்டுவருகிறது.

கிசான் ரயில் போக்குவரத்து திட்டம் பற்றி மதுரை ரயில்வே கோட்டம் விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் தென் மாவட்ட விவசாயிகளையும் சென்று சேரும் வகையில் ஒரு மாத கால பரப்புரைத் திட்டத்தை மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான கிசான் ரயில் சேவை துண்டுப் பிரசுரங்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் ஆனந்த் மதுரையில் வெளியிட்டார்.

முதல் பிரதியை முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா பெற்றுக்கொண்டார். நிகழ்வின்போது கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், உதவி வர்த்தக மேலாளர் கே.வி. பிரமோத் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தப் பரப்புரைத் திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாவூர்சத்திரம் போன்ற பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையும் படிங்க: இந்து மத துறவி கைது: 'மாநிலங்களுக்கு இடையேயான நெறிமுறைகள் மீறல்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.