மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் ராமகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(48). இவரின் மனைவி மாரிமுத்து இவர்களுக்கு 19 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து சிவபாலகுரு, நடராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பிளம்பர் வேலை பார்த்து வரும் வேல்முருகனுக்கு தொடர்ந்து வேலை இல்லாததால் கடன் வாங்கி செலவழித்துவிட்டு கடன்களை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவி மாரிமுத்துவுக்கும், மகன் சிவபாலனுக்கும் விஷ மாத்திரையை கொடுத்துவிட்டு தானும், சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையிலிருந்த வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி மற்றும் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பபடுகிறது.
இது குறித்து வேல்முருகனின் அண்ணன் பாலசுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வேலையில்லாமல், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததால் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வருகிறது. மேலும் சாவுக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:போராட்டத்தின்போது விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு