ETV Bharat / city

அறிவித்து செயல்படுத்தாத திட்டங்கள் கணக்கீடு செய்ய இயலாத அளவில் இருக்கின்றன - வேதனை தெரிவித்த நீதிபதிகள் - அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள்

மதுரை தமிழ்ச்சங்கத்தில் அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்தக்கோரிய வழக்கில், தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களைக்கணக்கிட்டால், அது கணக்கீடு செய்ய இயலாத அளவில் இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 20, 2022, 5:54 PM IST

மதுரை: மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சி தொடர்புடைய நூல்களை வைப்பது, நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரிய மனு விசாரணையில், தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களைக் கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்ய இயலாத அளவில் இருக்கும் என நீதிபதிகள் வேதனைத்தெரிவித்துள்ளனர்.

மேலூர் எட்டிமங்கலத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்குத்தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

மதுரை தமிழ்ச்சங்கத்தில் 26,035 புத்தகங்கள்: இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று (செப்.20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி, "தமிழ்ச்சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை, உலகத் தமிழ்ச்சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் நூல்கள் பெறப்பட்டுள்ளன.

2017-ல் நூலகத்தை அமைப்பதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கடந்த 2018-ல் அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை புத்தகங்களை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், அத்திட்டம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால், அது கணக்கீடு செய்ய இயலாத அளவில் இருக்கும்' எனக் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சென்னை கடற்கரை 300 அடி மூழ்கிவிடும்... 100 ஆண்டுகளில் வரப்போகும் பெரும் ஆபத்து...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.