மதுரை கீழமார்ட் வீதி பகுதியை சேர்ந்தவர் பிரகதாம்பாள்(92). இவர், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மாலை குடும்பத்தினரோடு சேர்ந்து வீட்டின் பூஜையறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, கற்பூரம் ஏற்றும் சமயத்தில், பிரகதாம்பாள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், கற்பூரத் தட்டு அவர் மீது விழுந்ததில் புடவையில் தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தீயை அணைப்பதற்குள் மூதாட்டியில் உடலில் 90 விழுக்காடிற்கு தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக மூதாட்டியை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கற்பூரத்தால் மூதாட்டி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.